Home36 தங்க விதிகள்
36 தங்க விதிகள்_witin chennai
36 தங்க விதிகள்_witin chennai
Standard shipping in 4 working days

36 தங்க விதிகள்

 
₹220
Within Chennai:
witin chennai
witin chennai
Within TamilNadu, Other than Chennai
Outside TamilNadu
Quantity:
1
Product Description

மகிழ்ச்சியுடன்,

“36 தங்க விதிகள்” என்ற எங்களின், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கான “36 Golden Rules” என்ற ஆங்கில படைப்பின் தமிழாக்கத்தை, திரு. அருண் ராய் , IAS , Secretary, TN MSME Ministry அவர்களால் (30th June 2022) தலைமை செயலகத்தில் அறிமுகப் படுத்தபட்டது.


தமிழ் தொழில் முனைவோர்களின் நெடு நாளைய எதிர்பார்ப்பை இன்று நிறைவேற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்.


21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகில் உள்ள ஒட்டு மொத்த வியாபார சமூகமும் DOT COM மற்றும் E-Commerce உத்வேகத்தில் புதுப்புத்துணர்ச்சி அடைந்தன; வியாபார முறை மாற்றம் மட்டும் காணவில்லை; நூறு சதவிகிதம் மொத்த உருவ மாற்றம் அடைந்து விட்டன.


இதன் பிறகு 20 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியாவில், உண்மையான e- பொருளாதரத்தை , வியாபாரத்தில் இருந்து வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் இருந்து பயனாளிகளுக்கு எடுத்து செல்லும் சரியான திசையில் பாதை மாற்றங்கள், நுண்ணிய இயைவிப்பு, அமைப்புக்களை சீராக்குதல், முதலியவைககளுக்கு ஆளாகி இருக்கிறோம். இது ஒவ்வொரு நாளும் அமேசான், ஸ்நாப் டீல், பிலிப் கார்ட் போன்ற ஆன்லைன் கடைகள் மூலம் பல மில்லியன் பரிவர்த்தனைகள் காண்கின்றன


ஆனால், வியாபாரத்தின் அடிப்படைகள் என்றும் எப்போதும் மாறுவதில்லை; மொத்த உருவமாற்றத்திற்க்கே உட்படுகிறது!


தரமான பொருள், தரமான சப்ளையர்கள் , ஆரோக்கியமான வாடிக்கையாளர் வாங்கும் அனுபவம், வாடிகையாளர் பரிந்துரை, கொள்ளவு, வளர்ச்சி, , டாப் லைன் (விற்பனை மூலம் வருவாய்) எனப்படும் அளவுகோல்கள் ,பாட்டம் லைன் (வருவாய் முதலியவை) எனப்படும் அளவுகோல்கள்,வங்கி வட்டி, கடன், ஒபெக்ஸ், காபெக்ஸ், மற்றும் இலாபகரத் தன்மை ஆகியவை  வியாபாரத்தின் அடிபடைகளுள் அடங்கும்

தற்போதைய நுகர்வோருடன் வியாபாரம் செய்யும் போது  கற்பனை செய்ய இயலாத புதிய கருதுக்கட்டளைகள் வியாபாரத்தில் உருவாகி இருப்பது குறித்து கூறினோம். அதே வேளையில், மறுபக்கம், அதே பழைய அடிப்படை கட்டளைகள் தான் வியாபாரத்தில் விளங்குகின்றது என்று இந்த பிரமாதமான உலகம் எதிர்பார்க்கிறது . எனினும் அவை , தொழில் முனைவோர்களின் வெற்றி விகிதத்தை போற்றி பேணும் வகையில் அளிக்கப்பட வேண்டும்

 

நாங்கள் தெரிவிக்ககூடியது, இந்த புத்தகமானது “செயல் வடிவில், மேன்மை அடைய (உதவும்) எளிய கருவி குறித்த அறிவு பெற, எளிய வழி முறை மற்றும் புரிதல் உடனான கைகோர்த்து பழகி விட” உதவும் ஒரு முயற்சி என்பதாகும் ..  ‘இந்த புத்தகமானது, அனைவரும், அவரவர் விரும்பும் வழி வகையில் வியாபாரத்தின் அடிப்படைகளை பார்க்க உதவும்;


தேவையான வற்றில் மட்டும் கவனம்”.என்பார்களே, அது போல், வணிக உரிமையாளர் அல்லது தொழில் முனைவோர் எந்த கனவு அல்லது பேரார்வதில் நிறுவனத்தை துவங்கினாரோ அந்த முறையில் ஒரு நீண்ட கால தாக்கம் ஏற்படுத்த உதவும். 


இந்த புத்தகம் எங்களின் சிறு மற்றும் குறு தொழில்கள் / நடுத்தர தொழிலகங்களில் 40 ஆண்டு கால மொத்த அனுபவத்தினை பகிரும் ஒரு தாழ்மையான முயற்சியாகும்.


வணிக உரிமையாளர்களுடன் எங்களுக்கு ஒரு பொதுவான அனுபவம் உண்டு- அனைவர்க்கும் அதே எதிர்பார்ப்புகள், அதே உணர்வுகள், அதே பிரச்சினைகள், வாழ்கையில் முன்னேற வேண்டும், வியாபாரத்தை வளர்க்க வேண்டும், ஒரு    பரம்பரியத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற அதே பேரார்வம், ஆம், இந்த மனிதன் வாழ்ந்தான், சமூகத்திற்கு எதையோ செய்தான், அந்த வகையில், தன்னை சார்ந்தவரின் நலனுக்காக சமூகத்தில் இருந்து தன பங்கை எடுத்துக்கொண்டான் என்று உலகிற்கு சொல்ல வேண்டும் என்ற அதே எதிர்பார்ப்பு. ஆகையால், நீங்கள் வாசிக்க செலவிடும் நேரத்திற்கு தகுதியுடையதாகவும் , சக தொழில் முனைவோருக்கு பரிந்துரைக்கும் வகையிலும் அமையும் என்ற நம்பிக்கையுடன், இந்த புத்தகத்தை தாழ்மையுடன் வழங்குகிறோம்

         எம்.கே.ஆனந்த்


சட்டத்தின் முன்னால் வியாபாரம் ஒரு  செயற்கை மனிதன் போன்றது .  அது அடுத்தடுத்து வெற்றிகளோடு எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நிரந்தரமாக நீடித்த வியாபாரத்திற்கு உத்திரவாதம் என்று சொல்லகூடிய திட்டவட்டமான பதில் ஏதும் இன்று வரை இல்லை. ஆனால் வியாபாரத்தின் தோல்விக்கான காரணங்கள் பலவாகும்; அவை அறியப்பட்டவையாகும். பங்காளர்களாக உள்ளவர்கள் , வியாபாரம் வெற்றி பெற்று நீண்ட காலம் தாக்கு பிடிக்க வேண்டும் என்று எதிபார்ப்பர்; சமூகங்கள், வியாபாரங்கள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றன.


வியாபார நிறுவனங்களின் தோல்விகளுக்கு நஷ்டம் மட்டும் காரணி அல்ல; பங்காளர்களாக உள்ளவர்கள், தனியாகவோ அல்லது கூட்டாகவோ , ஏதோ ஒரு வகையில் பங்களிக்கத்தான் செய்கின்றனர் என்பது ஒரு ஆழமான பகுப்பாய்வில் புலப்படுகிறது. தோராயமாக 40 விழுக்காடு [%] வியாபார நிறுவனங்கள் தான் இருக்கும் எல்லா காலங்களிலும் லாபகரமாக இயங்கி வந்தன என்பதை புள்ளியியல் விவரங்கள் காட்டுகின்றன. ( தரவுகள் NFIB யில் இருந்து , nfibonline.com)

பங்காளர்களாக உள்ளவர்கள், தங்களை இவ்வியாபாரத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டினை வழங்குவதில்லை; அவர்களின் தேவை எல்லாம் வியாபாரம் அவர்கள் நலனுக்காகவே தொடர வேண்டும் என்பதே. நிதர்சனத்தில், இவ்வியாபாரத்திற்கும் பங்காளர்களாக உள்ளவர்களுக்கும் ஒரு உறவு இருப்பதில்லை; குறுகிய லாபத்திற்காக மட்டுமே அவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்கின்றனர். சூழலில், சிறு மாறுபாட்டை கண்டாலும்.  உறவு வலையிலிருந்து வெளியேற தயங்குவதில்லை. ஆகையால், பங்காளர்கள் வர்களிடையே ஒரு வலுவான உறவு இருக்கும் பட்சத்தில், இவ்வியாபாரம் நிரந்திரமாக இல்லாவிட்டாலும், நீண்டகாலம் தாக்குப்பிடிக்கலாம். தயாரிப்புகள் வாழ்க்கை சுழற்சி முறையில் இயங்குவதால், வியாபாரத்தின் பொருளாதார நலனானது நேரத்திற்கு நேரம் மாறுபடும். ஒரு வியாபராரமானது கடினமான சூழல்களை எதிர்கொள்ள, பங்காளர்களாக உள்ளவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

   

இந்த புத்தகத்தில், யதார்த்தமான முறையில், இந்த (பங்காளர்களாக உள்ளவர்களுடனான) உறவை வலுப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். பங்காளர்களாக உள்ளவர்கள் அனைவரும் ஒரு சங்கிலியாய் இணைக்கபட்டிருகிறார்கள்; அந்த சங்கிலியில் ஒரு பலவீனமான இணைப்பு சங்கிலியை தகர்க்க போதுமானதாகிறது. ஆதலால், அவர்கள் அனைவரும் ஒரு சமமாக கருதப்பட வேண்டும்.


பங்காளர்களாக  உடையவர்களின் முக்கயத்துவம் கருதி, அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட,  வியாபாரத்தில் அவர்களின் மீதான எதிர்பார்ப்புக்களும் மற்றும் பொறுப்புக்களும் கையாளப்பட்டிருகின்றன.


இரண்டாவதாக, வியாபாரம் போட்டியை தாக்கு பிடிக்க வேண்டும். எனவே, அதற்கு போட்டியாளர்களிலிருந்து மாறுபட்ட பாதை மற்றும் வழிவகை தேவைப்படலாம். சந்தையில், வியாபாரத்திற்கு ஒரு பிடிப்பினை தரக்கூடிய இந்த  விஷயங்கள் கையாளபட்டிருக்கின்றன . 


சரியான நிவர்த்தி நடவடிக்கை பாதைகள் தேர்ந்து எடுக்க, ஆரோக்கியமான உறவு, விசுவாசம் வெல்வது முதலியவற்றை பெறுவதற்கு நடைமுறையில், தகவல் பரிமாற்றம் நடைபெறுவதற்கான சந்தர்பங்கள் அவ்வப்போது நிகழ்த்தப்பட  வேண்டும்.


இந்த புத்தகத்தில், விதிகளில், வியாபாரம் வெற்றி பெருவதற்கும் , நீண்ட காலம் தழைத்தோங்குவதற்கும் உண்டான அச்சு வார்ப்புரு (longevity matrix) காட்டப்பட்டுள்ளது.

 

நீங்கள் வளர வில்லை என்றால் மடிந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்பது ஒரு பழைய பழமொழி. இது வியாபாரங்களுக்கும் பொருந்தும். இந்த காரணிகளை ஆராய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வியாபாரம் மேம்பட அல்லது நிலை மாற்றீடிற்கு உட்பட ஏதுவான நடவடிக்கைகளை எடுங்கள்; வியாபாரம் நீண்ட நெடுங்காலம் இருக்க, அந்த வகை மாற்றத்தை உருவாக்கக்கூடிய நபர்களையே பணிக்கு தேர்ந்தெடுங்கள். 

 

கே. வி. முரளி


Sign up for More Services.

Strategic Business Advisory Services:

http://seechangeworld.in/strategic_business_advisor/

THE SEE CHANGE Way Sevices:

https://imojo.in/scw

Mgmt Products, Services and Assessment Tools:

https://seechangeonline.myinstamojo.com/

Email to : msme@seechangeworld.com | +91 63745.97880

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now